திருப்பூரில் 100 ஆக்சிசன் படுக்கைகள்! திறந்து வைத்தார் மு க ஸ்டாலின்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
 
oxygen

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி நடக்கிறது. அதன்படி தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின். மேலும் அவர் தன் ஆட்சியின் ஆரம்பம் முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை தக்க வைத்து வருகிறார் என்றே கூறலாம். மேலும் அவர் மக்களுக்கு உதவி புரியும் வண்ணமாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  தமிழகத்தில் தற்போது அவர் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.stalin

இதற்கு முன்னதாக மூன்று வாரமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் நான்காம் வார ஊரடங்கும் நடைமுறையில் உள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத பகுதியாக கொங்கு பகுதி காணப்படுகிறது. அந்த பகுதியில் தான் தற்போது கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதனை கொண்டு அந்த பகுதி மக்களிடையே நல்லதொரு இடத்தை பிடித்து விடலாம் என்று மு க ஸ்டாலின் எண்ணியுள்ளதாக சுற்றுவட்டார பேச்சுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்றைய தினம் கோயம்புத்தூர் செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு முன்னதாக தற்போது அவர் திருப்பூர் சென்று அங்கு ஆக்சிசன் படுக்கை கொண்ட கொரோனா  சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார்.

அதன்படி திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிசன் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேலும் இதனை அவர் அரசு மருத்துவமனையில் திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய தினம் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேர் ஸ்டாக் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web