"100க்கு மேற்பட்டவர்களிடமிருந்து 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!"

ஊரடங்கு  கடைபிடிக்காமல் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
 
lockdown

தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. காரணம் என்னவெனில் தற்போது நம் இந்தியாவில் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில தினங்களிலேயே தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தினார்.lockdown

மேலும் அவை தற்போது வரையிலும் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பலரும் இந்த ஊரடங்கு  பெரிதும் கருதாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை யும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது ஊரடங்கு மீறி சுற்றி அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிராம்பட்டினத்தில் ஊரடங்கும் மீறி சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்.

மேலும் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல் சுற்றிய 100க்கும் மேற்பட்டவர்கள் இடமிருந்து 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. இதுபோன்று அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web