பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு 10 முட்டைகள்: தமிழக அரசு உத்தரவு

பள்ளிகள் திறக்கும் வரை பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

 

பள்ளிகள் திறக்கும் வரை பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இந்த முட்டைகளை மாணவர்களின் பெற்றோர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகம் வாங்க வரும்போது இந்த முட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும் முட்டைகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழக அரசின் இந்த உத்தரவை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

From around the web