இந்த வாட்டி மழை இல்லை கனமழை 10 மாவட்டங்கள் மகிழ்ச்சி!வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்!
 
இந்த வாட்டி மழை இல்லை கனமழை 10 மாவட்டங்கள் மகிழ்ச்சி!வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவரும் முதலில் கூறுவது மே மாதம்தான். மே மாதம் தொடங்கினால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் குறிப்பாக சென்னையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவானது கணிசமாக குறைந்து வரும். இதனால் அங்கு வாழும் மக்கள் மிகவும் அச்சத்துடன் மே மாதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக வெப்பத்தின் தாக்கம் ஆனது அதிகரித்திருந்தன.

weather

மேலும் ஒரு சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ஆனது இயல்புநிலை காட்டிலும் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வேதனைப்பட்டனர் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு இன்பமான தகவலை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  கூறியது.மேலும் நேற்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றுமொரு இன்பமான தகவல்ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி ,கோவை, தேனி ,திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி ,சேலம், குமரி ,நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் குமரி பகுதியில் நிலவும் சுழற்சியால் சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web