மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள்! 178 வேட்பாளர்கள்!3856 வாக்குச்சாவடிகள்!

மதுரை 10 சட்டமன்றத் தொகுதியில் 178 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி உள்ளன. தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தில்  தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை கூறினார். தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொடுக்கப்படும் நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.

vote

தமிழகத்தில் 234 தொகுதியிலும் பல கூட்டணிகள் களமிறங்கியுள்ளன. தென் பகுதியில் மிகவும் சிறந்த ஊராக உள்ள மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இந்த 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 178 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 26 லட்சத்து 97 ஆயிரத்து 688 பேர் வாக்காளர்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில்  3856 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் 1330 வாக்குசாவடிகள் பதற்றமான  கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.   பதற்றமான வாக்குச்சாவடிகளில் 428 துணை ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5021 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3856 கண்ட்ரோல் யூனிட்டுகள் 3856 வி விபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளில் கோவிட்19 மருந்து உபகரணங்கள், தெர்மல் ஸ்கேனர், கையுறை போன்ற பொருட்கள் தயாராக உள்ளன.

From around the web