10, 12 பொதுத்தேர்வு ரத்தா? சி.பி.எஸ்.இ செயலாளர் பேட்டி

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கொரோனா வைரஸ் தடுப்பூசி இனும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகிக் கொண்டு வருகிறது 

கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்த பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் மாதம்தான் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என ஏற்கனவே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியிருந்தார் 

cbse

ஆனால் அதே நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த கல்வி ஆண்டில், 10ஆம், 12ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது 

ஆனால் இது குறித்து பேட்டியளித்த சிபிஎஸ்சி செயலாளர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வி ஆண்டில் கட்டாயம் நடத்தப்படும் என்றும் தேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டியின் மூலம் இந்த கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாகியுள்ளது

From around the web