என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசா? பெரும் பரபரப்பு

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்கவுண்டர் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர் தேசிய மனித உரிமை ஆணையமும் இது குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உண்மை கண்டறியும் குழுவை கொலை நடந்த இடத்திற்கு அனுப்ப உள்ளதாகவும்
 
என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசா? பெரும் பரபரப்பு

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்கவுண்டர் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தேசிய மனித உரிமை ஆணையமும் இது குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உண்மை கண்டறியும் குழுவை கொலை நடந்த இடத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ஒரு சிலர் இந்த என்கவுண்டரை கண்டித்து வந்த போதிலும் பெரும்பாலான மக்கள் இந்த என்கவுண்டரை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சற்றுமுன் வெளியான ஒரு செய்தியின் படி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு தனது நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு அளிக்க முன்வந்துள்ளார். ஆனால் இந்த பரிசை என்கவுண்டர் செய்த தெலுங்கானா போலீசார் ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

From around the web