24 மணி நேரத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது!
 
24 மணி நேரத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளனர்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா நிலைமைக்கு உலகமே தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.  எங்கும்  பரவிக் காணப்படும் இந்த கொரோனாவானது முதன்முதலில் சீனாவிலுள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டு அதன்பின்னர் சீன நாடு முழுவதும் கொரோனா நோயானது இருந்தன.மேலும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாக இருந்தன.

corona

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா நோயானது கடந்த ஆண்டில் வர தொடங்கியது ,ஆனால் இந்திய அரசானது முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அறிவித்து இந்த கொரோனா நோயை கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவில் சில தினங்களாக நோயின் தாக்கம் ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா நோயின் தாக்கம் ஆனதே தலைவிரித்தாடுகிறது. மேலும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். மேலும் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 தமிழகத்திலும் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய் பலி எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.  இந்நோயில் இருந்து தற்போது 24 மணி நேரத்தில் குணமடைந்து எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயிலிருந்து ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிப்புக் 1929329 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

From around the web