ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள்: முழுவிபரங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது இதனை யடுத்து ஜூன் 1 முதல் பல தளர்வூகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில், திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில், காட்பாடி – கோவை சிறப்பு ரயில் மற்றும் கோவை – மயிலாடுதுறை சிறப்பு
 

ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள்: முழுவிபரங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது இதனை யடுத்து ஜூன் 1 முதல் பல தளர்வூகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது

மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில், திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில், காட்பாடி – கோவை சிறப்பு ரயில் மற்றும் கோவை – மயிலாடுதுறை சிறப்பு ரயில் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளது

மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நண்பகல் 12 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். விழுப்புரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 9.20 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நாகர்கோவிலில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்று சேரும் என்றும், இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை , விருதுநகர், நெல்லை, ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

From around the web