ஜனவரி 1 முதல் ரூ.2000 நோட்டு செல்லாதா? அதிர்ச்சி தகவல்

வரும் ஜனவரி 1 முதல் ரூ.2000 நோட்டு செல்லாது என்று ஆடிட்டர் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இதனை நம்பி பலர் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டை செலவு செய்து வருகின்றனர். மேலும் யாராவது ரூ.2000 நோட்டு கொடுத்தால் அதை வாங்கவும் மறுக்கின்றனர், இந்த நிலையில் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியபோது, ‘சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி. 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல்
 

ஜனவரி 1 முதல் ரூ.2000 நோட்டு செல்லாதா? அதிர்ச்சி தகவல்

வரும் ஜனவரி 1 முதல் ரூ.2000 நோட்டு செல்லாது என்று ஆடிட்டர் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இதனை நம்பி பலர் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டை செலவு செய்து வருகின்றனர். மேலும் யாராவது ரூ.2000 நோட்டு கொடுத்தால் அதை வாங்கவும் மறுக்கின்றனர்,

இந்த நிலையில் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியபோது, ‘சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி. 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல் குறித்த எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ வெளியிடவில்லை. மக்களை குழப்பவே இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.

ஜனவரி 1 முதல் ரூ.2000 நோட்டு செல்லாதா? அதிர்ச்சி தகவல்

எனவே இது போன்ற தகவல்களை பொது மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்று வதந்தி பரப்புபவரக்ள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

சமீபத்தில் புதிய ரூ.1000 நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவிருப்பதாக கூறியதில் இருந்தே இந்த வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web