ஒரே ஒரு துப்பு கொடுத்த கிராமத்து இளைஞர்.. ரூ.86 லட்சம் வெகுமதி கொடுத்த அரசு..!

Published:

மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்காக கிராமத்து இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையினருக்கு ஒரே ஒரு துப்பு கொடுத்த நிலையில் மாவோயிஸ்டுகள் அனைவரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்த துப்பு கொடுத்த கிராமத்து இளைஞருக்கு மகாராஷ்டிரா அரசு 86  லட்சம் ரூபாய் பரிசு தொகையை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்து பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக தகவல் வெளியான நிலையில் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதை தற்செயலாக பார்த்த கிராமத்து இளைஞர் ஒருவர் இது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவரது தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன இடத்தில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததில் 12 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டுகளின் முக்கிய நபரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மாவோயிஸ்டுகளை பிடிக்க துப்பு கொடுத்த கிராமத்து இளைஞருக்கு மகாராஷ்டிரா அரசு 86 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும் தலா இரண்டு லட்ச ரூபாய் வெகுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சில டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...