பட்டுப்புடவையில் நயன், பட்டு வேட்டி சட்டையில் விக்கி; தீயாய் பரவும் திருப்பதி வீடியோ!

கோலிவுட் வானில் காதல் பறவைகளாக 6 ஆண்டுகளாக வட்டமிட்டு வந்த பிரபல நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, நேற்று முதல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அஜித்தின் மனைவி, பிள்ளைகள் என நட்சத்திர பட்டாளங்கள் புடைசூழ, நேற்று காலை 10:20 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

வாழ்த்திய பிரபலங்களின் வயிறு நிறையும் படி, பன்னிர் பட்டானிக்கறி, பருப்புக் கறி, அவியல், மோர் குழம்பு, மிக்கன் செட்டிநாடு கறி, உருளை கார மசாலா, வாளைக்காய் வறுவல், சென்னா கிழங்கு வறுவல், சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல், காய் பொரிச்சது, பொன்னி ரைஸ், பலாப் பழம் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், தயிர் வெஜிடபுள் ரைதா, வடகம், வத்தல், அப்பளம், ஏலக்காய் பால், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், கேரட் ஐஸ் கிரீம் என இலை நிறைய விருந்து படைத்தனர்.

திருமணம் முடிந்த கையோடு 20 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று இலவசமாக மதிய உணவு வழங்க நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் நயன் – விக்கி தம்பதிக்கு வாழ்த்துக்களை குவித்தது.

இதனையடுத்து நயன் – விக்கி தம்பதி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர். திருமணம் முடிந்த கையொடு திருப்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு தம்பதி இருவரும் காத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மங்களகரமான மஞ்சள் நிற பட்டுப்புடவை மற்றும் நகைகளுடன் நயன்தாராவும், பட்டு, வேட்டி சட்டையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் வீடியோ இதோ…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...