முதலிரவு அறைக்குள் நுழைந்ததுமே மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; திருமணமான அன்றே நிகழ்ந்த சோகம்!

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார் சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத்தும், மதனப்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 13-ம் தேதி உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றுள்ளது.

அன்றைய தினம் இரவே புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் துளசி பிரசாத், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த மணமகனை குடும்பத்தார் உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமான 24 மணி நேரத்திலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment