
தமிழகம்
கும்பகோணம் அருகே புதுமண தம்பதி வெட்டிக்கொலை: போலீசார் வலைவீச்சு!
கும்பகோணத்தில் புதுமண தம்பதியினரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் புதுமண தம்பதியினரை கொலை செய்வது வழக்கமாக ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை கொலை செய்வது வாடிக்கையாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் சரண்யா மற்றும் சேகர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஊருக்குள் நுழைந்தனர்.
அப்போது இவர்கள் வருவதைப்பார்த்த சரண்யாவின் சகோதரர் ஆத்திரம் தாங்காமல் இருவரையும் கொடூரமாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சரண்யா மற்றும் சேகர் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் இவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இருவர் களையும் கொலை செய்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
