பிறந்த ஒரு சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை கட்டைப்பையில் வைத்து மர்ம பெண் ஒருவர் கடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தஞ்சையை சேர்ந்த ராஜலட்சுமி-குணசேகரன் தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பெண்கள் வார்டில் இரவில் தங்குவதற்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் குணசேகரன் வெளியே சென்றிருந்தார்
அதை பயன்படுத்திய மர்ம பெண் ஒருவர், ராஜலட்சுமி இடம் பேச்சு கொடுத்து அவரது விவரங்களை தெரிந்து கொண்டுள்ளார். மேலும் அவருக்கு உதவுவது போல் அவர் நடித்துள்ளதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் குழந்தையை அந்த மர்ம பெண்ணிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ராஜலட்சுமி குளிக்க சென்றதாக தெரிகிறது. குளித்துவிட்டு வரும்போது அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை. இதனால் கதறி அழுத ராஜலட்சுமி காவல்துறையில் புகார் கொடுக்க, இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
பிறந்த ஒரு சில மணி நேரங்களில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.