மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!
கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி உலகின் அனைத்து நாடுகளையும் பதம் பார்த்துவிட்டது. உலகின் வளரந்த நாடுகளும் கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் பெரிய அளவில் உயிர் சேதத்தை சந்தித்தனர்.
அந்தவகையில் கொரோனாத் தொற்றில் இருந்து மக்களைச் சிறப்பாக காப்பாற்றிய நாடுகளில் முதல் இடத்தினைப் பிடித்தது நியூசிலாந்து என்பது நாம் அறிந்ததே.
இதுகுறித்து உலக நாடுகள் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தது.
அதாவது நியூசிலாந்தில் மொத்தமாக 15,550 பேருக்கு மட்டுமே கொரோனாத் தொற்று ஏற்பட்டது. உயிர் பலி என்று கொண்டால் 52 பேர் மட்டுமே இறுந்துனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனாப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தன்னுடைய திருமணத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது ஆர்டர்னுக்கு தன் நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுடம் 2 ஆண்டுகளுக்கு முன்னா் பெற்றோர் முன்னிலையில் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.
மேலும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தநிலையில் தொடரும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நியூசிலாந்தில் தினசரிக்கு 70 என்ற பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதனையொட்டி திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில், “கொரோனாவில் இருந்து மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்குத் திரும்பிய பின்னர்தான் திருமணம் பற்றி யோசிப்பேன்.” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
