மும்பையில் விக்கெட் மழை; வெறும் 62 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்!!

நியூசிலாந்தை பழிவாங்கும் முயற்சியில் இந்திய அணி சுற்றித் திரிகிறது. ஏனென்றால் அனைத்து ஐசிசி கோப்பை கனவுகளை நியூசிலாந்து அணி தட்டிப் பறித்தது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி t20 வேர்ல்டு கப் இன் இந்தியா அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி தட்டிப் பறித்தது.

இந்தியா நியூஸிலாந்து

அதேபோல் ஐசிசி பெஸ்ட் வேர்ல்டு கப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை நியூசிலாந்து அணி வென்றது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணி மீது கடும் கோபத்தில் இருந்தது .

இதற்கு ஒரு வாய்ப்பாக தற்போது நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. அதன்படி மும்பையில் இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்திருந்தார்.இந்த நிலையில் நியூசிலாந்து பஸ்ட் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய பவுலர்களிடம் சுருண்டு விழுந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்களையும், ஜெயந்த் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment