புத்தாண்டு முதல் சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்-மத்திய அரசு அறிவிப்பு;

2022 ஆம் ஆண்டு பல்வேறு புதிய திட்டங்கள் நம் இந்தியாவில் நடைபெற உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறார்களுக்கு  தடுப்பூசி. அதன்படி 15 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட CoWin-ல்  ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.

ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடும் திட்டம் வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment