விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை 5 ஆம் இடத்தில் குரு பகவான், 4 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார். அஷ்டம சனியால் தடைகள் ஏற்பட்டாலும், அது சிறந்த அனுபவமாக மாறும்.

2023 ஆம் ஆண்டு 9 மாதங்கள் கிரகங்களின் இடப் பெயர்ச்சி உங்கள் ராசிக்குச் சிறப்பான பலனைக் கொடுப்பதாய் இருக்கும். மே மாதம் வரையிலான காலகட்டத்தில் எந்தவொரு முயற்சியினையும் தயங்காமல் எடுக்கும்பட்சத்தில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் கைகூடும் காலமாக இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் சிக்கல்கள் கிடையாது. வேலைப்பளு அதிகரிக்கும். தொழில்ரீதியாக ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்.

பொருளாதாரம் கையில் இருந்தாலும், தொடர்ந்து பற்றாக்குறை இருப்பதாக உணர்வீர்கள். ஆடம்பரச் செலவுகளுக்காக லோன்களை வாங்குவீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை குரு பகவான் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்ததுபோல் வரன் அமையும். மன நிறைவுடன் திருமணம் செய்வீர்கள்.

காதலர்கள் காதலை வீட்டில் சொல்லும்போது பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வு சமயங்களில் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்படுவர். தடைகளை கண்டு கொள்ளாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை நிம்மதியான வாழ்க்கையினை வாழ்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.