விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

எந்த ஒரு துறை அல்லது சப்ஜெக்டை பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அதில் உண்மை தன்மையை கண்டுபிடிக்கும் திறமை உள்ள விருச்சிக ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு 27.12.2020 அன்று நடந்த மகர சனி பெயர்ச்சி முதல் ஏழரைச்சனி முடிவுக்கு வந்தது .ஆனாலும் சனிபகவானால் இதுவரை உங்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கவில்லை.

27.12.2021 முதல் உங்களுக்கு சனி பகவான் நிரந்தரமான வேலை அல்லது தொழில் வாய்ப்பை வழங்க இருக்கிறார். அதற்கு தகுந்தாற் போல மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து உங்களுடைய ராசியை விட்டு விலகி உங்களுக்கு முந்திய ராசியான துலாம் ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷப ராசியில் இருந்த ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடமான மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.

எனவே மார்ச் மூன்றாம் வாரத்தில் இருந்து உங்களுக்கு ராகு பகவான் மற்றும் கேது பகவானால் நன்மைகள் கிடைக்க இருக்கின்றன .இதனால், பல ஆண்டுகளாக இருந்து வந்த கடன் நோய் எதிரி அல்லது தேவையற்ற பிரச்சனைகள் போன்றவைகள் முடிவுக்கு வரக்கூடிய கால கட்டமாக இந்த 2022ஆம் ஆண்டு உங்களுக்கு இருக்கப் போகிறது.

விருச்சிகம் 2

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு குருபகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் யோகாதிபதி ஆவார்.

ஐந்தாம் இடத்திற்கு குரு பகவான் வரும் பொழுது குலதெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி. எனவே ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து இந்த வருடம் முழுவதும் விருச்சிக ராசியில் பிறந்த அன்பர்கள் ஒவ்வொரு அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி திதி என்றும் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும் .

உங்கள் குலதெய்வ வழக்கப்படி உங்கள் குலதெய்வம் கோயிலில் இருந்து அமைந்திருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் சன்னதிக்கும் படையல் வைக்க வேண்டும். 90 நிமிடங்கள் வரை உங்களுக்கு என்ன தேவை என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு வேறு ஆலயங்களுக்குச் செல்லாமல் நேராக உங்கள் வீட்டுக்கு சென்று விட வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக மீன ராசியில் பெயர்ச்சியாகி இருக்கும் 5-ம் இடம் குருவின் அனுக்கிரகமும் குலதெய்வத்தின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

விருச்சிகம் 3

27.12.2021 முதல் அடுத்த பதினைந்து வருடங்களுக்கு உங்களுக்கு தடையில்லாத முன்னேற்றம் கிடைக்கும்.

ஏழரைச் சனி உங்களுக்கு கடந்த 10 வருடங்களாக பல்வேறு முட்டுக் கட்டைகளையும் துயரங்களையும் வேதனைகளின் கொடுத்திருந்தது. 27 .12 .2021 தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது .

உங்களுடைய வயது அனுபவம் கல்வித் தகுதி தனித்திறமை போன்றவைகளுக்கு பொருத்தமான வேலை அல்லது தொழில் தேடிவரும்.

‘ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது ஆண்டவன் தடுப்பது யாராலும் கொடுக்க முடியாது’ என்ற பழமொழி ஒரு ஜோதிட பழமொழி ஆகும். ஆண்டவன் நேரடியாக எந்த ஒரு மனிதருக்கும் தருவதில்லை. நவகிரகங்களில் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் மற்றும் தொழிலுக்கு அதிபதியான அதிபதியாக இருப்பவர் சனி பகவானாவார். அந்த சனிபகவான் மூலமாக உங்களுக்கு நிரந்தரமான வேலை தனது தொழிலை தர இருக்கிறார்.

இதுவரை நீங்கள் இருந்து வந்த கடினமான மற்றும் துயரமான சூழ்நிலை முடிவுக்கு வரப்போகிறது.

உங்கள் குலதெய்வத்தை மாதம் தோறும் வழிபட்டு வளமான வாழ்க்கை வாழுங்கள்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews