சிம்மம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தலை வணங்காமல் இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு இந்த வருடம் முன்னேற்றம் தரக்கூடிய வருடமாக இருக்கப்போகிறது. இந்த வருடத்தில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப்போகும் கிரகங்கள் சனி பகவான் ராகு பகவான் மற்றும் கேது பகவான் ஆவார்கள்.

13.11.2021 அன்று உங்கள் ராசிக்கு 7-ஆம் இடமான சுப ஸ்தானத்திற்கு குரு பகவான் வந்தார். அவர் வெறும் ஐந்து மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு 13.4.2022 அன்று உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே 13.4.2022க்குள் சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் முயற்சிகள் கைகூடும். இந்த தேதி வரை சனி பகவானும் குரு பகவானும் உங்களுக்கு நன்மைகள் தரக்கூடிய நிலையில் இருப்பார்கள்.

சிம்மம் 2

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு பற்றிய பயம் விலகி விடும்.

தொலை தூர தேசங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பலருக்கு இதுவரை நிலுவையில் இருந்து வந்த சம்பளம் மொத்தமாக கிடைத்துவிடும்.

குரு பெயர்ச்சிக்கு பிறகு (13.4.2022 முதல்) சிம்மராசிக்காரர்களுக்கு மறைமுக வருமானம் உண்டாக துவங்கும்.

21.3.2022 வரை உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும் பத்தாம் இடத்தில் ராகுவும் இருப்பார்கள். இது மிகவும் நன்மை தரக்கூடிய நிலையாகும்.

உங்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமையை நினைவூட்டும் விதமாக 21.3.2022 அன்று நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி அமையப் போகிறது.

சிம்மம் 3

இந்த வருடத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று உங்கள் ஊரில் உள்ள பழமையான கோயில் அல்லது நதிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். சந்தர்ப்பம் உள்ளவர்கள் பிதுர் முக்தித் தலங்கள் என்று போற்றப்படும் ஆலயங்களுக்குச் சென்று மாதம் ஒருமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வர வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் அன்று உங்கள் பகுதியில் உள்ள நாட்டுப்பசு மற்றும் எருமைகளுக்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை தானம் செய்து வர வேண்டியது அவசியமாகும். இதன் மூலமாக உங்களுக்கு உரிய ஆன்மீக குருவை இந்த வருட இறுதியில் நேரில் சந்திக்கும் பாக்கியம் உண்டாகும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.