ரிஷபம் புத்தாண்டு ராசி பலன் 2023!

அதிஷ்டத்தை ருசி பார்க்கும் வருடமாக 2023 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு நிச்சயம் இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை, பதவி உயர்வு, வேலைசார்ந்த இடமாற்றம், சம்பள உயர்வு என நினைத்த அனைத்தும் கைமேல் பலனாகக் கிடைக்கும் அமோகமான ஆண்டாக இருக்கும்.

தொழில் ரீதியாக அதிஷ்டம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தொழில் அபிவிருத்தி, புதுத் தொழில் செய்தல் என நீங்கள் அடுத்தகட்ட வாழ்க்கையினை நோக்கி பயணிப்பீர்கள். குரு பகவான் 11 ஆம் இடத்தில் இருப்பதால் தைரியத்துடனும், துணிச்சலோடும் செயல்பட்டு நினைத்த காரியத்தை முடிப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை மே மாதம் வரையிலான காலகட்டம் வரை எந்தவொரு தடங்கலும் இல்லாத காலகட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி நிம்மதியுடன் இருப்பர்.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது பெரிய அளவில் தடைகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த உடல் நலக் கோளாறுகளில் இருந்து மீள்வீர்கள்.

குழந்தை பாக்கியத்துக்கு காத்து இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் உயர் கல்வி குறித்த முடிவுகளை எடுப்பீர்கள்.

இல்லத்தரசிகள் மன நிம்மதியுடன், மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள். செல்வம், செழிப்புடன் வாழும் ஆண்டாக இருக்கும். பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து சேர்வார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.