Connect with us

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

ரிஷபம்

Astrology

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

ரிஷப ராசிக்காரர்களே!

உங்களுக்கு அனைத்து வருட கிரகங்களும் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு மகத்தான நன்மைகளை வாரி வழங்க இருக்கின்றன.

21.3.2022 வரை உங்களுடைய ராசிக்கு ஜென்ம ராகு பகவான் இருக்கிறார். அதன் பிறகு உங்களுடைய ராசிக்கு முந்தைய ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

21.3.2022 வரை உங்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையற்ற சிக்கல்களில் சிக்குவதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த 18 மாதங்களாக இருந்திருக்கும். சிலருக்கு பிரேத
ஆத்மாவால் தொல்லைகள் ஏற்பட்டு இருக்கும். அது இத்துடன் நிறைவடைகிறது.

ரிஷபம் 2

இந்த வருடத்தில் உங்களுக்கு பத்தாம் இடத்தில் 13.4.2022 வரை இருக்கிறார்.இதனால் உங்களுக்கு இட மாற்றம் உண்டாகும் அல்லது வேலை இழப்பு உண்டாகி இருக்கும். இந்த வேலை இழப்பு நன்மை என்பதை நீங்கள் தமிழ் புத்தாண்டுக்கு பிறகே உணர்வீர்கள். அதுவரை சரியான வேலை கிடைக்குமா என்ற பயம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

அதன் பிறகு உங்களுக்கு முழுக்க முழுக்க லாபம் தரும் 11-ம் இடத்திற்கு வர இருக்கிறார் .

இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகத்தை தரும் சனி பகவான் பாக்கிய ஸ்தானம் என்று கூறக்கூடிய ஒன்பதாமிடத்தில் இருக்கிறார். எனவே உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் பொற்காலமாக காலமாக இருக்கிறது .

உலகியல் ஜோதிடப்படி சில வைரஸ் பரவல் காரணமாக தொழில் மற்றும் பணப்புழக்கம் ஓரளவு தான் மந்தமாக இருக்கும். மற்றபடி உங்களுக்கு தங்கு தடையின்றி வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கல்யாண வயதில் உள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு திருமணம் நடைபெறும்.

rishabam 3

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் இருந்தபோதிலும் 2024 பிறகு நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வது நன்று.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது பூமியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வைரஸ் பரவல் இருக்கும். அது 2020 டூ 2022 வரை இருக்கிறது. இதன் விளைவாக உலக அளவிலான பொருளாதார மந்தம் 2023 வரை தொடரும். எனவே வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியமாகும்.

கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் 2023 வரை நமது நாட்டிலேயே வேலை பார்ப்பது நன்று.

இந்த மூன்று வருட அனுபவம் உங்களுக்கு 2024 முதல் அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு தர காரணமாக இருக்கும்.

இந்த வருடம் முழுவதும் நீங்கள் செய்யவேண்டிய ஆன்மிக கடமை ஒன்று உண்டு. பழமையான கோயிலை புதுப்பிக்க நீங்கள் உங்களால் ஆன உதவி செய்ய வேண்டும்.

அது உங்களால் முடியாத பட்சத்தில் உங்கள் பகுதியில் உள்ள உழவார பணி குழுவில் இணைந்து கொள்ளுங்கள். அவர்கள் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதம் ஒருமுறை பழமையான ஆலயம் சென்று உழவாரப்பணி செய்வார்கள். அதில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு இதுவரை இருந்த கண் திருஷ்டி கோளாறு விலகிவிடும் .

அது தவிர தினமும் பகலில் அல்லது இரவில் உங்களுக்கு வசதியான நேரத்தில் ‘ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை எழுதி வரவேண்டும் அல்லது ஜெபித்து வர வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு சனிபகவானால் கிடைக்கக்கூடிய யோகங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top