மிதுனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

எதையும் உணர்வுபூர்வமாக அணுகும் மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக அஷ்டமச் சனி காலம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் அஷ்டமச்சனி உங்களுக்கு இருக்கிறது. ஒருவருக்கு ஏழரை சனி ஏழரை ஆண்டுகள் வரை இருக்கும். ஏழரை ஆண்டுகளில் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய துன்பத்தை வெறும் இரண்டரை ஆண்டுகளில் தரக்கூடிய காலம்தான் அஷ்டமச்சனி காலமாகும்.

உங்களுக்கு 13.11.2021 அன்று குரு பகவான் எட்டாமிடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். அதுவரை அஷ்டமச் சனியாலும் குரு பகவான் நீச ராசியில் இருந்ததாலும் பல்வேறு விதமான துயரங்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். பற்றாக்குறை மூலமாக தினசரி வாழ்க்கையை நடத்துவதே படும் போராட்டமாக இருந்திருக்கும். அந்த கஷ்டமான சூழ்நிலை கும்பத்திற்கு குரு பெயர்ச்சி ஆனது முதல் படிப்படியாக மாறத் துவங்கி விட்டது.

மிதுனம் 2

இந்த முறை கும்ப ராசியில் குருபகவான் வெறும் ஐந்து மாதங்கள் தான் இருக்கப் போகிறார். இந்த ஐந்து மாதங்கள் முழுவதும் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த நெருக்கடியான வாழ்க்கை நிலை மாறி இருக்கும். அடுத்தபடியாக 13.4.2022 அன்று உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார்.

பத்தாமிட குருபெயர்ச்சி எல்லா ராசிக்காரர்களுக்கும் நன்மையை தராமல் இருந்தாலும் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தீமையை செய்வது கிடையாது. எனவே இந்த வருடம் முழுவதும் குரு பகவானின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இந்த வருடத்தில் திருமணம் ஆகாத மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும்.

மிதுனம் 3

பல ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லாமல் தனியார் மற்றும் அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு இந்த வருடம் கிடைக்கும். சொந்த தொழில் பார்த்து வருபவர்களுக்கு இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறி விடும்.

பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த வருடம் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

ஆலயத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் முறையான அங்கீகாரம் பெறுவார்கள்.

எனவே நீங்கள் இந்த வருடம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருப்பது அவசியமாகும். அடிக்கடி அல்லது தினமும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அஷ்டமச்சனி பல தடைகளை உருவாக்குவார் .

சனிபகவானின் குருவாகிய கால பைரவ பெருமானின் அருளைப் பெறுவதற்கு முதலில் ஜீவகாருண்யம் என்று சொல்லக் கூடிய சைவ உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

இந்த வருடம் முழுவதும் தினமும் 108 முறை மிதுன ராசிக்காரர்கள் ஜபிக்க/எழுத வேண்டிய பைரவ மந்திரம் ‘ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமஹ’ என்ற மந்திரம் ஆகும்.

இவ்வாறு ஜெபிக்க இயலாதவர்கள் உங்கள் தெருவில் உள்ள பைரவ வாகனங்களாக இருக்கும் நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வருவது அவசியமாகும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.