மேஷம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

எதிலும் முதன்மை வகிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக பல்வேறு நண்பர்கள் மூலமாக தொடர்ந்து உதவிகள் கிடைத்துக்கொண்டே இருந்திருக்கும்.

இந்த உதவிகள் வரக்கூடிய 13.4.2022 வரை தொடரும். இருந்த போதிலும் கொரோனா காலத்தில் இருந்து வந்த பண நெருக்கடி இந்த 2022ஆம் ஆண்டில் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.

வராத பணம் வசூலாகும்; வருமான அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்; நீங்கள் தர வேண்டிய கடனை தீர்க்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும்; எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

அதேசமயம் 21.3.2022 முதல் உங்களுடைய ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார். இவர் 18 மாதங்கள் இருப்பார்.

mesham rasi palan 2022

ஜென்ம ராகு உங்களுக்கு அதிகபட்சமான அலைச்சலை தருவார். இதில் உள்ள டீன்-ஏஜ் வயது பருவத்தில் உள்ள மேஷராசிக்காரர்கள் அடுத்த 18 மாதங்களுக்கு உங்களுடைய நண்பர்களின் காதல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ஏனென்றால் அதன் மூலமாக எதிர்பாராத அவமானம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் கிரகங்கள் சனி பகவான் மற்றும் குருபகவான் ஆவார்கள்.

13.4.2022 முதல் இந்த வருடம் முழுவதும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் மேஷ ராசி அன்பர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

குடும்பஸ்தர்கள் பல ஆண்டுகளாக சொந்த வீடு அல்லது வாகனம் வாங்கும் திட்டத்தில் இருப்பார்கள். அது இந்த எட்டு மாதங்களில் நிறைவேறிவிடும்.

மேஷம் 3

மேஷ ராசியில் பிறந்த ஒவ்வொருவரும் 21 3 2022 முதல் அடுத்த 18 மாதங்களுக்கு கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதன்பிறகு பின்வரும் வராகி மந்திரத்தை தினமும் இரவில் 108 முறை எழுதி வரவேண்டும்.

‘ஓம் ஐம் க்லௌம் சிவ பஞ்சமி நமக’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

மந்திரம் எழுத இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சிங்கம்புணரி என்ற ஊரில் அமைந்திருக்கும் வாத்தியார் ஐயா ஜீவ சமாதிக்கு சென்று இரவில் தங்க வேண்டும். முடிந்தால் அப்போது வாராகி மாலை என்ற பாடல் தொகுப்பை ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் மூலமாக அவருடைய அனுக்கிரகத்தை பெற முடியும். இதனால் ஜென்ம ராகுவால் ஏற்படும், ஏற்படவிருக்கும் துயரங்கள் நெருங்காது.

பொன்னமராவதி, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் போன்ற ஊர்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் சிற்றூர் தான் சிங்கம்புணரி ஆகும்.

இங்கே உள்ள வாத்தியாரய்யா ஜீவ சமாதி என்பது முத்து வடுகநாதர் சித்தர் உடைய ஜீவசமாதி ஆகும் .

சிங்கம்புணரி மக்கள் முத்துவடுகநாதர் அய்யாவை வாத்தியார் ஐயா என்று அன்போடு அழைக்கிறார்கள் இவர் ஒரு வராகி சித்தர் ஆவார்.

ஜோதிடர்
வீர முனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.