மீனம் புத்தாண்டு ராசி பலன் 2023!

குரு பகவான் ஜென்மத்தில் இருப்பதால் அம்ச யோகம் கிடைக்கும். குருபலன் பொருந்திய வருடமாக 2023 ஆம் ஆண்டாக இருக்கும். சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதால் அலைச்சல், டென்ஷன், வேலைப்பளு, மன நிம்மதியின்மை போன்றவற்றிற்கு வழிவகுப்பார். ஆனால் இவற்றைக் கடக்க குரு பகவான் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலை கிடைக்காது. மேலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு தள்ளிப் போகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே புரிதல் இன்மையால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை ஓரளவு தவிர்க்க முடியும்.

உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். தொழில்ரீதியாக கவனக் குறைவாக எடுக்கும் முடிவுகள் நஷ்டத்திற்கு இட்டுச் செல்லும். தொழில் அபிவிருத்தி செய்யும் முடிவுகளைத் தள்ளிப் போடவும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடைகள் ஏற்படும். சனி பகவானின் பார்வை விழுவதால் மாணவர்கள் கல்விரீதியாக கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஆராய்ந்து செய்தல் வேண்டும். பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எந்தவொரு விஷயத்தினையும் செய்யாதீர்கள்; நிச்சயம் அது பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews