மீனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

தன்னுடைய வசீகரிக்கும் கண்கள் மூலமாக அனைவரையும் தன்னுடைய நட்பு வளையத்திற்குள் கொண்டு வரும் திறமை கொண்ட மீனராசி அன்பர்களே!!!

உங்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் பக்கபலமாக இருக்கக் கூடிய கிரகங்கள் சனி பகவான் மற்றும் குருபகவான் ஆவார்கள்.

13.11.2021 வரை உங்களுடைய ராசி அதிபதியான குரு பகவான் நீச கதியில் இருந்தார். அதன் விளைவாக பல்வேறு சுபகாரியங்கள் உங்களுக்கு தாமதமாகிக் கொண்டே இருந்திருக்கும். இந்த சூழ்நிலை 13.11.2021 அன்று நடைபெற்ற கும்பம் குரு பெயர்ச்சி முதல் மாறி இருக்கும்.

மார்ச் மாதம் மூன்றாம் வாரம் வரை உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு பகவானும் 9-ஆம் இடத்தில் கேது பகவானும் இருந்து பல்வேறு நல்ல பலன்களை வாரி வழங்கி இருப்பார்கள்.

அசாத்தியமான மன உறுதியால் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றி மேல் வெற்றி அடைந்து இருப்பீர்கள். ஒன்பதாம் இடத்தில் இருந்த கேது பகவான் மூலமாக உங்களுக்கு சித்தர்கள் மற்றும் சாதுக்களின் ஆசீர்வாதம் கிடைத்துக்கொண்டே இருந்திருக்கும்.

பல்வேறு ஆன்மிக பயணங்கள் மூலமாக உங்களுடைய ஆத்மபலம் அதிகரிக்க துவங்கும். இந்த நிலை அடுத்த 18 மாதங்களுக்கு தொடரும்.

மீனம் 2

வரக்கூடிய மார்ச் மூன்றாம் வாரத்தில் இருந்து உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடமான மேஷ ராசிக்கு ராகு பகவான் வர இருக்கிறார். அதே நாளில் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடமான துலாம் ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.

எனவே நீங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ராகுவின் அதிதேவதை என்று போற்றப்படும் துர்க்கையை செவ்வாய்க்கிழமை தோறும் வரும் ராகு காலத்தில் துர்க்கை அஷ்டகம் ஜெபித்து வருவது நன்று அல்லது தினமும் இரவில் பின்வரும் வராகி மந்திரத்தை 108 முறை எழுதி வருவது நன்று.

‘ஓம் ஐம் க்லௌம் சிவ பஞ்சமியை நமக’

இந்த மந்திரம் எழுதுபவர்கள் கண்டிப்பாக ஜீவகாருண்யம் என்று சொல்லக் கூடிய சைவ உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும். கண்டிப்பாக மது அருந்தக்கூடாது.

ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி அன்றும் உங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் நடைபெறும் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு வர வேண்டியது அவசியமாகும். இதன் மூலமாக சர்ப்ப கிரகங்களால் உண்டாகக்கூடிய குழப்பங்கள் பெருமளவு குறைந்துவிடும்.

உங்களுடைய ராசி அதிபதி 13.4.2022 முதல் உங்களுடைய ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இந்த வருடம் முழுவதும் உங்களுடைய ராசியை கடந்து கொண்டு இருப்பார். ஆட்சி பெற்ற ஜென்ம குரு நன்மைகளை வாரி வழங்குவார்.

மீன ராசியில் பிறந்த அன்பர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

திருமணத்தடை நீங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரக் கூடிய சூழ்நிலை உருவாகும். யோகம் தரும் குழந்தை பிறக்கக் கூடிய கிரக அமைப்பு இந்த வருடம் உங்களுக்கு அமைய இருக்கின்றது.

பூர்வீக சொத்து மற்றும் முதலீடு மூலமாக மூலமாக கிடைக்கவேண்டிய லாபங்கள் இந்த வருடம் முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த வருடம் முழுக்க சனிபகவான் இருந்து வருவதால் உங்களுக்கு 20% உழைப்பில் 80% வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

மீனம் 3

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி திதி அன்று நீங்கள் உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று 90 நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

உங்களுடைய சொந்த செலவில் உங்கள் குல தெய்வத்திற்கு உங்கள் குல வழக்கப்படி படையல் (தளுவை) வைக்க வேண்டும்.

இந்த ஆன்மிக வழிமுறைகளை இந்த வருடம் முழுவதும் நீங்கள் பின்பற்றி வருவதன் மூலமாக இந்த 2022ஆம் ஆண்டு உங்களுக்கு நிம்மதியான மற்றும் சுபிட்சமான வருடமாக இருக்கும்!!!

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.