மகரம் புத்தாண்டு ராசி பலன் 2023!

2022 ஆம் ஆண்டில் சந்தித்த பலவிதமான இன்னல்கள், பிரச்சினைகள், தொந்தரவுகள், அவமானங்கள் என அனைத்துக்கும் விமோசனம் கிடைக்கும் காலமாக 2023 ஆம் ஆண்டு இருக்கும்.

போராட்டம் நிறைந்த வாழ்க்கை முடிவுக்கு வரும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், திருப்திகரமான பொருளாதாரம் இருக்கும்.

கடன் இல்லாத சௌகரியமான வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் குடும்பத்தில் திருப்தியின்மை இருக்கும்.

குடும்பத்தில் தேவைகள் அதிகரிக்கும், இதனால் குடும்பத்தின் சுமையை ஒரே நபராய் நீங்கள் தாங்க வேண்டி இருக்கும். கணவன்- மனைவி இருவருக்கும் குடும்ப உறுப்பினர்களால் உபத்திரங்கள் ஏற்படும். புது முயற்சிகள் செய்யும்போது தவறான முடிவுகளை எடுத்துவிடாமல் இருக்க குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்துச் செயல்படுதல் நல்லது.

பணப் புழக்கம் கையில் இருந்தாலும், பெரிதாக சேமிப்பில் நாட்டம் காட்டமாட்டீர்கள், ஆடம்பர செலவுகளைச் செய்வீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் கவனம் இல்லாமல் இருந்தநிலையில் இனி அவை அனைத்தும் மாறப்போகின்றது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததுபோல் வரன் கிடைக்காமல் நொந்து போய் இருப்பீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மனரீதியான நெருடல்கள் இருக்கும், ஆனால் பணவரவு சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறு சிறு தொந்தரவுகள் தொடர்ந்து இருக்கும். வண்டி, வாகனங்கள் மாற்றுதல், வீடு பழுது பார்த்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.