மகரம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

உலகத்தின் பெரும் செல்வந்தர்கள் பிறந்திருக்கும் மகரராசி அன்பர்களே!!!

உங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக சனி பகவானின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய கிரகங்கள் குரு பகவான் மற்றும் கேது பகவான் ஆவார்கள் .

ஒவ்வொரு மனிதரும் போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை அனுபவிக்கவே இந்த பிறவியில் பிறந்து உள்ளார்கள்.

போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த பிறவியில் உயர்கல்வி, சொத்துக்கள், செல்வ வளம், புகழ், தனித்திறமை, அரசு அல்லது தனியார் வேலை, மிகச் சிறப்பான குடும்ப வாழ்க்கை, குழந்தை செல்வம் என்று அமைகிறது .

அதேபோல போன நான்கு பிறவிகளில் செய்த பாவத்தின் பலனை இந்த பிறவியில் ஜென்ம சனி காலத்தில் தான் அனுபவிக்க வேண்டும் என்று காலபைரவ சம்கிதை தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் நம்மை நிர்வாகம் செய்யும் சிவபெருமானின் பணியாளர் என்று போற்றப்படும் கால பைரவ பெருமான் மிகவும் கருணை மிக்கவர்.

எவரொருவர் ஜென்மச் சனி காலத்தில் அசைவம் மற்றும் மது அருந்துவதை தவிர்த்து விட்டு தினமும் பைரவர் ஜபம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சனி பகவானால் ஏற்படும் துயரங்கள் நீங்கும். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான தெய்வீக நிலை நமக்கு வரமாக கிடைத்திருக்கிறது. எனவே 2022ஆம் ஆண்டு முழுவதும் மகர ராசி அன்பர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது.

அதன்பிறகு தினமும் ‘ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ’ என்ற பைரவ மந்திரத்தை 108 முறை எழுதி கொண்டு வர வேண்டும் அல்லது ஜெபித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக ஜென்மச் சனியால் இருந்து வரும் துயரங்கள் படிப்படியாக குறைந்து விடும். நிம்மதியான வாழ்க்கையும் அமைந்து விடும்.

ம்கரம் 2

13.11.2021 முதல் உங்களுடைய ராசிக்கு 2-ஆம் இடத்திற்கு குரு பகவான் வந்திருப்பதால் குருவின் பலத்தால் ஜென்மச் சனியின் துயரங்கள் சுமார் 60% குறையத் துவங்கி இருக்கும்.

இந்த வருடத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். மூன்றாம் இடத்திற்கு குரு வரும் போது வருமானப் பற்றாக்குறை உண்டாகும். இருந்தபோதிலும் மாத கிரகங்கள் அந்த வருமான பற்றாக்குறையை சரி செய்யும்.

அதேசமயம் மார்ச் மூன்றாம் வாரத்தில் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் 4-ஆம் இடத்திற்கும் பதினோராம் இடத்தில் இருந்து வந்த கேது பகவான் 10ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆக இருக்கிறார். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு அலைச்சல்கள் உடன் கூடிய வருமான வாய்ப்புகள் அமையும். ஆனாலும் நிரந்தரமான வேலை அல்லது தொழில் வாய்ப்பு அமைவது சிரமமாக இருக்கும்.

பத்தாம் இடத்தில் கேது இருப்பதால் எதிர்பாராத துறவி அல்லது மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

மகரம் 3

தினசரி ஏதாவது ஒரு ஜீவ சமாதிக்கு சென்று வருவது நல்லது.

ஜென்மச் சனியின் துயரத்தை நீக்குவதற்கு ஒரு பரிகாரத்தை சித்தர்கள் நமக்கு தெரிவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணிக்கு மேல் 10.30 க்குள் மண் அகல் விளக்கில் வெளிப்பக்கம் கருப்பு வண்ணம் பூச வேண்டும். அதில் பாதி நெய் நிரப்ப வேண்டும். மீதி இலுப்பை எண்ணெய் நிரப்பவேண்டும். ஒரு சொட்டு மட்டும் எலுமிச்சை சாறு அத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த மண் விளக்கை காலபைரவர் சன்னதியில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக ஜென்மச் சனியின் துயரங்கள் நீங்கும்.

இது தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் உங்கள் ஊர் அல்லது மாவட்டத்திலுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கே நடைபெறும் அஷ்டமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அப்பொழுது பைரவ மந்திரம் (ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ) ஜெபிக்க வேண்டும். இந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் இதை செயல்படுத்த வேண்டும்.

தினமும் பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு உணவு தானம் செய்து வரவேண்டும்.

நாற்பத்தி ஒரு வயதுக்கு உட்பட்ட மகர ராசி அன்பர்கள் பகல் பொழுதில் பைரவ மந்திரத்தை ஜெபித்து வர வேண்டும் அல்லது 108 முறை எழுதி வர வேண்டும். இரவுப்பொழுதில் வராகி மாலையை ஒரு முறை ஜபம் செய்து வரவேண்டும்.

அவ்வாறு ஜெபம் அல்லது எழுத ஆரம்பிக்கும் முன்பாக கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். 20.12.2023 வரை கண்டிப்பாக இந்த சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் எதிர் பலன்கள் உண்டாகும். இதில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்து வருவதன் மூலமாக இந்த 2022ஆம் ஆண்டு ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை தரும் என்பது உறுதி.

இந்த வருடம் முழுவதும் உங்களுடைய மன உறுதியை படிப்படியாக அதிகரிக்க கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் குலதெய்வத்தை வழிபாடு செய்தல் மற்றும் பைரவர் ஜெபம் (ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ) மூலமாக நிம்மதியான வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews