கன்னி புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் எதையும் சாதிக்கப் பிறந்த கன்னி ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் பக்கபலமாக இருக்கக்கூடிய முதல் கிரகம் சனி பகவான். நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த வருடம் முழுவதும் நன்மைகளை வாரி வழங்கி இருப்பது குருபகவான். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் நன்மைகளை செய்து கொண்டு இருப்பது ராகு பகவான் மற்றும் கேது பகவான்.

இந்த வருடத்தில் உங்களுக்கு முதல் நான்கு மாதங்கள் மட்டும் சிறுசிறு சிக்கல்களும் கடும் அலைச்சல்களும் இருக்கும். அதன் பிறகு 20 சதவீத உழைப்பில் 80 சதவீத வருமானம் அல்லது லாபத்தைப் பெற ஆரம்பிப்பீர்கள்.

கன்னி 2

ராகு கேது பெயர்ச்சி ஆனது இந்த வருடத்தில் 21.3.2022 அன்று நடைபெற இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் உங்களுக்கு நிரந்தரமான வருமானம் வாய்ப்பு கூறிய சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் அல்லது படிப்பு உயர்கல்வி அல்லது பகுதிநேர கல்வி அமைந்திருக்கும். அந்த கல்விக்குரிய பலனை இந்த வருடத்தில் 14.4.2022 முதல் அனுபவிக்க துவங்குவீர்கள்.

இந்த வருடம் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டியது :-

மாதம் ஒரு வெள்ளிக்கிழமை என்று உங்கள் ஊரில் உள்ள கோ சாலைக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் நாட்டு பசுக்களுக்கு அகத்திக்கீரை ,வாழைப்பழம், அச்சு வெல்லம் போன்றவைகளை தானம் செய்து வாருங்கள்.

சந்தர்ப்பம் அமைந்தால் கோசாலையில் கோசாலை நிர்வாகி அனுமதியோடு நாட்டு பசுக்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வாருங்கள். இதன் மூலமாக உங்களுக்கு இரண்டாமிடத்தில் உள்ள கோச்சார கேது மற்றும் எட்டாமிடத்தில் உள்ள கோச்சார ராகுவால் வரக்கூடிய துயரங்கள் குறையும். மேலும் உங்கள் முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி 3

பல ஆண்டுகளுக்கு முன்பாக உங்களிடம் கடன் வாங்கியவர்கள் இந்த வருடத்தில் தாமாகவே அந்த பணத்தை திருப்பித் தரும் சந்தர்ப்ப சூழ்நிலை உண்டாகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி திதி அன்று உங்கள் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வ கோயில் மரபுப்படி படையல் வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த வருடம் முழுவதும் மாதம் ஒரு முறை இவ்வாறு செய்து வருவதன் மூலமாக உங்களுக்கு இந்த வருடம் வளமான வாழ்க்கையாக இருக்கும் .

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.