கடகம் புத்தாண்டு ராசி பலன் 2023!

சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் செய்யும் காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும். ஆனால் 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்.

10 ஆம் இடத்தில் உள்ள ராகு பகவான் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் இடர்பாடுகளை தவிடு பொடியாக்கிவிடுவார். தடை, எதிர்ப்பு, குழப்பம் என அனைத்தும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.

வேலைவாய்ப்புரீதியாக வேலைப்பளு அதிகமாக இருக்கும், புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. தொழில்ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து தடைகளைக் கொடுப்பார். காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது எதிர்ப்பு நிச்சயம் இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை தேவையற்ற பேச்சுகளால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படும்.

கணவரின் உடன் பிறப்புகளால் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் பிரிவுக்கு இட்டுச் செல்லும், உடன்பிறப்புகள் சொத்துரீதியாக பிரச்சினைகள் செய்வார்கள். குடும்ப உறுப்பினர்களால் சிக்கல்கள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தேவையற்ற கவனச் சிதறல்களால் கல்வியில் மந்தநிலை இருக்கும். இளைஞர்கள் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

உடல் ஆரோக்கிய விஷயத்தில் விரயச் செலவுகள் அதிகம் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.