கடகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

தன்னுடைய மனதை மட்டும் நம்பி மகத்தான சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும் கடக ராசி அன்பர்களே!!!

கடந்த ஒரு வருடமாக தங்களுக்கு வீடு அல்லது வாகனம் வாங்கும்போது அமைந்திருக்கும். அதேபோல இந்த 2022ஆம் ஆண்டு உங்களுக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை தரக்கூடிய வருடமாக இருக்கப்போகிறது.

இந்த வருடத்தில் உங்களுக்கு 13.4.2022 வரை எட்டாம் இடத்தில் குரு பகவான் இருப்பார். அதுவரை உங்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் சிறிது சறுக்கல்கள் இருக்கும்.

ஒரு சிலரிடம் சொன்னபடி வாக்கை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உருவாகும் இருந்தபோதிலும் கிரகங்களின் பலத்தால் ஓரளவு சமாளிக்க முடியும்.

கடகம் 2

13.4.2022 முதல் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்பதாம் இடத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாக போகிறார். அன்றுமுதல் இந்த வருடம் முழுவதும் உங்களுடைய எல்லா விதமான மன நெருக்கடி, வருமான நெருக்கடி, குடும்ப குடும்ப உறவுகளில் இருந்து வந்த நெருக்கடி அனைத்தும் படிப்படியாக விலகி விடும்.

இந்த வருடம் முழுவதும் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடமான கேந்திர ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பார்.

13.4.2022 முதல் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசியை ஒரே நேரத்தில் சனி பகவானும் குரு பகவானும் பார்ப்பார்கள். இவ்வாறு ஒரே நேரத்தில் தர்ம அதிபதியான குருபகவானும் அதிபதியான சனிபகவானும் பார்ப்பது மிகவும் முக்கியமான திருப்புமுனை தரக்கூடிய வருடமாக மாற்றிவிடும்.

கடகம் 3

நீங்கள் இந்த வருடம் முழுவதும் ஜெபிக்க வேண்டிய பைரவ மந்திரம் ‘ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமக’ என்ற மந்திரமாகும்.

நீங்கள் இந்த வருடத்தில் மாதம் ஒருமுறையாவது உங்கள் ஊரில் உள்ள பழமையான கோயில் வாசலில் அன்னதானம் செய்து வாருங்கள். சந்தர்ப்பம் அமைந்தால் உங்கள் குலதெய்வம் கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்து வாருங்கள். இதன் மூலமாக உங்களுக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த நீண்டகால திட்டங்கள் அல்லது ஏக்கங்கள் நிறைவேறிவிடும் .

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews