தனுசு புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக பின்பற்றி அதை உங்கள் உறவினர்களுக்கும் போதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு நெருக்கடிகள் குறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது.

27.12.2020 அன்று உங்களுடைய ராசியில் இருந்து உங்களுக்கு அடுத்த ராசியான மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகி இருக்கிறார். இதன் மூலமாக உங்களுக்கு ஜென்ம சனியினால் இருந்து வந்த துயரங்கள் விலகி விட்டன. இருந்த போதிலும் 13.11.2021 வரை உங்களுடைய ராசி அதிபதி குரு பகவான் நீச கதியில் இருந்தார். நீச பங்க ராஜ யோகத்தில் இருந்தாலும்கூட கடந்த சில வருடங்களாக உங்களுடைய வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற சூழ்நிலையில் இருந்து வந்தது. 13.11.2021 முதல் இந்த நெருக்கடி நிலை மாற துவங்கியிருக்கிறது.

உங்களுடைய ராசி அதிபதியான குரு பகவான் நீச ராசியான மகர ராசியில் இருந்து நட்பு ராசியான கும்பம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலமாக உங்களுக்கு ஏழரைச்சனியின் தாக்கம் மற்றும் ராசி அதிபதி நீசம் போன்ற சிரம சூழ்நிலை மாறி இருக்கும்.

தனுசு 2

ஒருவருக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலம் முழுவதும் அவர்கள் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் மட்டுமே ஓரளவு நிம்மதியான தினசரி வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் மூன்றாம் பகுதியான வாக்குச் சனி என்ற பாதச்சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீங்கள் 20.12.2023 வரை கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு கட்டுப்பாடுகளை உங்களால் பின்பற்ற முடிந்தால் அதன் பிறகு நீங்கள் தினமும் பைரவ மந்திரஜபம் செய்து வரலாம்.

அல்லது ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று உங்கள் ஊரில் உள்ள கால பைரவர் சன்னதிக்குச் சென்று அஷ்டமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அஷ்டமி பூஜை நடைபெற்று கொண்டிருக்கும் போது காலபைரவரை பார்த்தவாறு ‘ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜெபித்து வர வேண்டும்.

அல்லது தினமும் வீட்டில் பகலில் அல்லது இரவில் 108 முறை ‘ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை எழுதி வரவேண்டும். இந்த வருடம் முழுவதும் தினமும் எழுதி வரவேண்டும்.

அல்லது ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலம் (காலை 9 முதல் 10.30) அல்லது குளிகை காலத்தில் (காலை 6 முதல் 7.30) உங்கள் ஊரில் உள்ள கால பைரவர் சன்னதிக்கு செல்ல வேண்டும். காலபைரவர் சன்னதிக்கு முன்பாக சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபமேற்றி 108 முறை ‘ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ’ என்ற மந்திரம் ஜெபித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலமாகவும் வாக்கு சனியின் துயரங்கள் படிப்படியாக குறையத் துவங்கும். இதன் மூலமாக உங்களுக்கு இதுவரை இருந்துவந்த கஷ்டமான சூழ்நிலை காலபைரவரின் அனுக்கிரகத்தால் படிப்படியாக குறையத் துவங்கும் .

சனிபகவானின் குருவாக காலபைரவர் இருப்பதால் எவரொருவர் காலபைரவ பெருமானை தினமும் ஜெபம் செய்கிறார்களோ அல்லது காலபைரவர் பெருமானை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவானால் வர இருக்கும் துயரங்கள் குறையும்.

உங்கள் தெருவில் உள்ள பைரவ வாகனமான தெரு நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வருவதன் மூலமாகவும் உங்களுக்கு துயரங்கள் குறையும் .

அல்லது ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் ஊரில் உள்ள வன்னி மரத்தை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பைரவ மந்திரம் ஜெபித்துக் கொண்டு எட்டு முறை வலம் வரவேண்டும்.

பெரும்பாலான பழமையான சிவாலயங்களில் தல விருட்சமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது. அவ்வாறு இல்லாமல் பல நகர பகுதிகளிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் வன்னிமரம் தனித்து காணப்படும். அங்கேயும் இவ்வாறு செய்யலாம். இதற்கு விருட்ச வழிபாடு என்று பெயர். கடந்த சில நூற்றாண்டுகளாக மறைந்து போய்விட்டது.

தனுசு 3

இந்த வருடம் மார்ச் மூன்றாம் வாரத்தில் உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் 5-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதே நேரத்தில் 12ஆம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் 11ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ஐந்தாம் இடத்திற்கு ராகு பகவான் வரும்போது மனசஞ்சலம் மற்றும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் சிலருக்கு பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனை உண்டாகும். எனவே அடுத்த 18 மாதங்களில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ராகுவின் அதிதேவதையான துர்க்கை அல்லது காளியின் அல்லது ஏதாவது ஒரு உக்கிரமான பெண் தெய்வத்தை வாரம் ஒருநாள் வழிபட்டு வருவது அவசியமாகும்.

11-ஆம் இடத்திற்கு வந்திருக்கும் கேது பகவானால் திடீரென்று ஆன்மிக பயணங்கள் அடிக்கடி உண்டாகும். எதிர்பாராத சூழ்நிலையில் மகான்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும்.

இந்த 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய கிரகங்கள் குரு பகவான் மற்றும் கேது பகவான்.

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் உங்களுடைய ராசி அதிபதியான குரு பகவான் மூன்றாம் இடமான கும்ப ராசியில் இருந்து 4ஆம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இந்த வருடம் முழுவதும் நான்காமிடத்தில் சஞ்சரிப்பார். இதன் மூலமாக இந்த 2022ஆம் ஆண்டில் பிற்பாதியில் உங்களுக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.