புத்தாண்டு நள்ளிரவு தரிசனம்-கோவில்களுக்கு தடையில்லை: அமைச்சர் சேகர் பாபு;

நாளை இரவு முதல் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பல நாடுகள் காத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். அதோடு டிசம்பர் 31ஆம் தேதி கோவில்கள் திறக்கப்படுமா? என்ற சந்தேகத்துடன் கேள்வியும் காணப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகிழ்ச்சியான தகவலைக் கூறியுள்ளார். அதன்படி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களில் தரிசனம் செய்ய தடை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

ஆயினும் சமூக இடைவெளியுடன் கோயில்களில் நள்ளிரவு தரிசனத்தை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். தனிமனித இடைவெளி, முக கவசம் போன்ற விதிகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment