புத்தாண்டு விதிமீறல்: 252 பேர் மீது வழக்கு பதிவு!!

நாடு முழுவதும் இன்றைய தினத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டின் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டை கொண்டாடும் விதமாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவது, கட்டாயம் மாஸ்க் அணிவது, அதிவேகமாக இளைஞர்கள் பைக் ஓட்டுவது போன்றவைகளை தடுக்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

370 மரங்கள் வெட்டிய விவகாரம்: வனச்சரகர் உள்பட 5 பேர் கைது!

இதற்காக நேற்று மாலை முதலில் இருந்தே கே.கே.நகர், அண்ணா சாலை, தி.நகர் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசார் 252 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே போல் சுமார் 276 வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.