மக்களே உஷார்!! வந்துவிட்டது புதிய வைரஸ்.. எச்சரிக்கும் WHO..
கிழக்கு ஐரோப்பாவை நோக்கி புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கமானது பல கோடியை தாண்டியுள்ள நிலையில் பல லட்சம் நபர்களின் உயிர்களை பறித்துள்ளது. இதனால் பலரும் இந்த வைரஸ்ஸை கண்டு அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில் ஒமைக்ரான் தாக்கமானது கடந்த இரண்டு மாதங்களாக ஐரோப்பிய நாடுகளான அர்பேனியா, சால்ஸ்பர்க், ஜார்ஜியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் புதிதாக உரு மாறிய ஒமைக்ரான் வைரஸின் தாக்கமானது தற்போது அதிகரித்து இரண்டிப்பாகி உள்ளது. இதனால் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
