மக்களுக்கு எச்சரிக்கை மணி !! வந்துவிட்டது புதிய வைரஸ்..அதுவும் இந்தியாவில்…

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1937-ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் ஒரு பெண்ணிடம் முதன் முதலான கண்டறியப்பட்டது வெஸ்ட் நைல் காய்ச்சல். அதன்பிறகுதான் நைல் நதியில் உள்ள காக்கைகள் மற்றும் புறாக்களும் தாக்கும் இந்த வைரஸால் அதிக அளவில் பாதிப்படைந்தனர். கொரோனாவை போலவே ஏற்கனவே பல நாடுகளில் நுழைந்த இந்த வைரஸ்டால் கிரிஸ், இஸ்ரேல்,ரோமானியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியது.

இந்நிலையில் பறவைகளால் பரவும் இந்த காய்ச்சல் கொசுக்கள் மூலம் அதிகம் பரவுகிறதாம். அதுவும் எவ்வித அறிகுறியும் இல்லாமல். இந்த நோய் பரவி வருவது அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கிறது. காரணம் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் தீராத காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவைகளையும் ஏற்படுத்தி விடுகின்றனர்.

சில நேரங்களில் ஞாபகமறதியும் ஏற்படும். ஒரு சிலரின் மூளை நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டும். இதுவரையில் இந்த வைரஸ் பாதிப்பு 250 பறவையினங்களில் கண்டறியப்பட்டுள்ளதாம். பறவைகள் மட்டுமில்லாமல் மேலை நாடுகள் இந்த காய்ச்சலினால் உயிரிழக்கும் குதிரைகளின் எண்ணிக்கை அதிகம் பதிவாகியுள்ளது.

ஆனால் விலங்குகளை காக்க தடுப்பூசி வந்துவிட்டது என கூறினாலும் மனிதர்களுக்கான தடுப்பூசி இன்னும் அறிமுகமாகவில்லை என கூறப்படுகிறது. ரத்த தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தாய்ப்பாலூட்டுதல் ஆகியவற்றில் எளிமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் பல வைரஸ்கள் பரவி வரும் நிலையில் தற்போது இந்த காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment