Connect with us

இந்து மகா சபை தலைவர் மகாத்மாவின் புகைப்படத்தை சுட்டதாக சர்ச்சை

செய்திகள்

இந்து மகா சபை தலைவர் மகாத்மாவின் புகைப்படத்தை சுட்டதாக சர்ச்சை

மகாத்மா காந்தியின் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கடந்த 1948ம் ஆண்டு இந்து மகாசபை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.

edc9e1ad4b4d73835d482efa01042988

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை செய்து வைத்துள்ளனர்.

இந்த அமைப்பின் தலைவரான பூஜா சகுன் பாண்டே ஒரு பொம்மை துப்பாக்கியை கொண்டு மகாத்மாவின் உருவ பொம்மையை சுடுகிறார்.

அவர் சுட்டதும் அவர் உடலில் இருந்து ரத்தம் வருவது போல சிவப்பு திரவத்தை செட்டிங் செய்து வைத்திருந்தனர்.

பின்னர் பூஜா சகுன் காந்தி கொல்லப்பட்டதை கொண்டாடும் வ்கையில் இனிப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

இது இன்றைய சமூக வலைதளங்களை ஆக்ரமிக்கும் டிரெண்டிங் நியூஸாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் இது குறித்து இரு கருத்துடைய தரப்பினர் சண்டையிட்டுமோதி கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top