Connect with us

பதிவு செய்யாத கார்! அமைச்சர் ரகுபதி-க்கு புதிய வாகனம்!

ரகுபதி

தமிழகம்

பதிவு செய்யாத கார்! அமைச்சர் ரகுபதி-க்கு புதிய வாகனம்!

தமிழக அரசு சார்பில் ஒவ்வோரு மாவட்டத்திற்கு எம்.எல்.ஏ-க்களுக்கு 3 கார்கள் ஒதுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தமிழக அரசு சார்பில் இனோவா கார் புதிதாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் காருக்கு வாகன எண் மற்றும் நம்பர் பிளேட்டிலும் எழுதப்பட்டு இருந்தது. இருப்பினும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Capture 14

இதனையடுத்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டபிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி-க்கு அந்த வாகனம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் இதுநாள் வரையில் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இன்று மாலைக்குள் வாகன எண் பதிவு செய்யப்படும் என்றும் இத்தகைய செயல்களில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top