தமிழகத்தில் புதிய வகை கொரோனா! அடுத்த ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டம்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. இருப்பினும் அவை கடந்த மாதங்களை விட குறைவாகவே உள்ளது. பல பகுதிகளில் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.சுப்பிரமணியன்

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் சில அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார். அந்த படி தமிழகத்தில்  புதிய வகை உருமாறிய கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவை பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா என்றும் கூறப்படுகிறது. தமிழகத்திலும் இந்த வகை கொரோனா தொடங்கியதாக காண்ப்படுக்கிறது. இவை நோய் பாதிப்புகள் குறைவாக கண்டறியப்பட்டு வந்தாலும் மீண்டும் நோய் பாதிக்காத வகையில் தடுப்பூசிகள் செலுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் வர இருக்கின்ற இரண்டு மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலான மாதங்களாக அமையக்கூடும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். இதனால் மக்கள் அனைவரும் அரசின் கோரிக்கையை ஏற்று, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment