புது அப்டேட்: வாட்ஸப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்! ஆனால் நேரம் முக்கியம்;

புதிது புதிதாக சமூக வலைதளங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பல அரட்டை அரங்கம் இணையதளத்தில் அதிகரித்து வருகின்றன. அவற்றுள் ஒன்று வாட்ஸ்அப். இந்த வாட்ஸ்அப் ஆனது அனைத்து தரப்பு மக்களிடமும் தற்போது அத்தியாவசிய ஒன்றாக அமைந்துள்ளது.

whatapp

இதில் பல குழுக்கள் அமைத்து கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இந்த நிலையில் குழுக்களை உருவாக்கும் அட்மினுக்கு சில அதிகாரங்களை வாட்ஸ்அப் அளித்துள்ளது. ஏற்கனவே குரூப் அட்மின் தான் மற்றவர்களை குழுவில் இணைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் delete for everyone  போன்ற புது அனுமதியினை குரூப் அட்மினுக்கு அளித்துள்ளது. ஏற்கனவே உள்ளது போல இல்லாமல் சற்று கூடுதல் தொழில்நுட்பத்துடன் காணப்படுகிறது.

அதன்படி வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு தனிப்பட்ட அல்லது குழுவில் உள்ள ஒரு செய்தியை நீக்குவதற்கு ஒரு மணிநேரம் 8 நிமிடம் மற்றும் 16 நொடிகளுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த செய்தி நீக்கிய உடன் “செய்தி நீக்கப்பட்டது” என்ற தகவலும் வெளியாகும். இவை அனைத்தும் அந்த நேரத்திற்குள் துல்லியமாகத் இருந்தால் சாத்தியம் என்றும் கூறியுள்ளது. அந்த செய்தியை குழு உறுப்பினர்கள் படிக்காத பட்சத்தில் இவை குழு அட்மின்களுக்கு செல்லும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment