நாளை வலிமை படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் மகிழ்ச்சி

c66c4351061b146e80d72977e526dc74

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நாளை வலிமை படத்தின் டீஸர் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு சின்ன திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

நாளை வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் என்ற 15 முதல் 20 வினாடிகள் வரையிலான வீடியோ வெளியாகும் என்றும் அதன் பின்னர் அக்டோபர் மாதம்தான் டீசர் வெளியாகும் அக்டோபர் இறுதியில் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வரும் வலிமை படத்தின் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.