பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்-‘ஆதித்ய கரிகாலனின் போஸ்டர்’ வெளியீடு!!

தமிழ் சினிமாவில் எப்போது பான் இந்தியா திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்தை மாற்றியமைத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக அடுத்த மாதம் கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உள்ளது. இவையெல்லாம் தாண்டி பல மாதங்களாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு எப்போது வெளியாகும் என்று காத்திருப்பில் உள்ளது பொன்னியின் செல்வன்.

இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் தமிழ் ஹீரோக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பாடிட்டு ஹீரோக்களும் நடித்துள்ளதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் ஜெயம் ரவி, நடிகர் விக்ரம், நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய், மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட முன்னணி பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இது ஒரு காவியமான திரைப்படமாக உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றினை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டரை பட குழுவினர் ஷேர் செய்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் மாத முப்பதாம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்தது மட்டுமில்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

https://www.instagram.com/p/CflKlKyBh9i/?utm_source=ig_web_copy_link

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.