ஆப்பிரிக்காவில் புதிய வகை காய்ச்சல்? உலக நாடுகள் பீதி; மிசோரம் அரசு தடை உத்தரவு!!
தற்போது புதிதாக ஒரு காய்ச்சல் பரவுவதாக காணப்படுகிறது. இவை ஆப்பிரிக்கா நாட்டில் வளம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த நோய் பன்றிகளை குறிவைத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மிசோராம் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் காரணமாக பல்வேறு விதமான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மிசோராம் மாநிலத்தில் பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உத்தரவிட்டது மிசோரம் மாநில அரசு.
புதிய ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது அடுத்து மிசோரம் மாநில அரசு திடீரென்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலால் 384 பன்றிகள் உயிரிழந்தன என்றும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்றளவும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் காணப்பட்டுள்ள நிலையில். இவ்வாறு ஆப்பிரிக்காவில் பன்றிகளை குறிவைத்து காய்ச்சல் வருவது பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
