கடந்த 1996 முதல் 1997-ம் ஆண்டு வரையில் செல்வ வரி தாக்கல் செய்யவில்லை என்று சசிகலாவிற்கு எதிராக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
அப்போது 2001- ம் ஆண்டு சசிகலா தரப்பில் சொத்து மதிப்பு ரூ. 4,97,52,100 கோடி சொத்துக்கள் இருந்ததாகவும் இதற்கு ரூ. 10,13,271 லட்சம் வரி செலுத்த வேண்டும் என வரிமான வரித்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட வருமான துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு ரூ. 10,13,271 கடனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது வருமானவரித் துறையினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூ.1 கோடிக்கு குறைவான வழக்குகளை கைவிடுவது என்ற வருமான வரித்துறை சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்குகளை திரும்ப பெறுவதாக கூறப்பட்டு இருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருமானவரித் துறை விளக்கத்தை ஏற்று, சசிகலாவுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.