புதிய புயல் உருவாகிறது: தமிழகத்தில் கனமழை!

76b38b67c678916d9470f17a858ad0f2

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வங்க கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இதனால் மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

தெற்கு ஒடிசா, ஆந்திரா மாநில பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா? அந்த புயல் எந்த திசையை நோக்கி செல்லும் என்பது குறித்து மிக விரைவில் கணிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
ஏற்கனவே தமிழகத்தில் தற்போது நல்ல மழை பெய்து வரும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment