விக்ரம் நடிக்கும் கோப்ரா, ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமாரால் தயாரிக்கப்பட்டு வரவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். இப்படத்தில் சியான் விக்ரமுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, முகமது அலி பெய்க், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி மற்றும் கே.எஸ். ரவிக்குமார் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.
இசை மற்றும் ஒலிப்பதிவு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் புவன் சீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விக்ரம் குறைந்தது 20 வேடங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது
கோப்ராவின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் புதிய லிரிக்கல் வீடியோ பாடலை வெளியிட்டனர். ‘உயிர் உருகுதே’ என்ற பாடல் ஒரு காதல் மற்றும் மெல்லிசைப் பாடலாகும். தாமரை எழுதிய பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் குரல் கொடுத்தார்.
விக்ரம் படம் வெற்றி சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி! அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
Check out the song here: