தமிழகத்தில் கால் வைத்த டாடா! இனிமே மின் பற்றாக்குறைக்கு டாட்டா!! புதிய சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம்;

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு பல இடங்களில் தொடர் மின்வெட்டு நிகழ்ந்தது. இது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் மாறி மாறி விவாதித்தனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் புதிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

அதன்படி தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் சார்பில் புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கிறது. தமிழ்நாட்டில் ரூபாய் 3,000 கோடி மதிப்பீட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலியில் 4 ஜிகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அலகை டாடா குழுமம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 25 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த 25 ஜிகாவாட் இல் 20 ஜிகாவாட் மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் உருவானால் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment