கூகுள் பே செயலிக்கு புதிய கட்டுப்பாடு.. இனிமேல் எவ்வளவு பணம் அனுப்பலாம்?

இந்தியா தற்போது டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது என்பதும் வங்கிகளுக்கு சென்று பணம் அனுப்பும் காலம் மலையேறிப் போய் தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே கூகுள் பே உள்பட செயலிகள் மூலம் ஒரு வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு ஒரு சில நொடிகளில் பண பரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் செயலிகள் அதிகமாகி வருகிறது என்பதும் கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google pay5  இந்தியாவின் சிறு கிராமங்களில் கூட யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த பண பரிவர்த்தனைக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யுபிஐ வழியாக பணப் பரிவர்த்தனை தினமும் ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது .இதற்கு முன்பு 50 ஆயிரம் வரை மட்டுமே பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ஒரு லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

google pay4இருப்பினும் இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கியின் மூலம் அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம் என்றும் கனரா வங்கியில் 25 ஆயிரம் வரை மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இதுவரை யுபிஐ வழியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 முறை மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது அதிகபட்சமாக 20 முறை பணம் பரிவர்த்தனை செய்யலாம் என நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடும் ஒவ்வொரு செயலிக்கும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

google pay1கூகுள் செயலியை பொறுத்தவரை தினமும் 10 பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்பதும் ஆனால் போன்பே, பேடிஎம் ஆகிய செயலிகளில் தினமும் 20 பரிவர்த்தனை வரை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு தினமும் எத்தனை முறை கூகுள்பே மற்றும் பிற செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்பதை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்வது நலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.