மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்-நீர்வளத்துறை அமைச்சர் அறிக்கை!

ஆற்று மணல் திருட்டுகள் காரணமாகத்தான் இன்று பல ஆறுகள் காணாமலேயே போய்விட்டன. ஏனென்றால் ஆறு பாய்ந்து ஓடுவதற்கு வலிமையாக இருப்பது ஆற்று மணல்தான். நம் தமிழகத்தில் முன்பு ஆற்றுமணல் கொள்ளை அதிகமாகவே காணப்பட்டது.  மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை விதித்து தமிழகத்தின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பித்தது போக மீதம் உள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொருத்து பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மணல் கொள்ளை குறைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான மணல் கிடைக்கும் என்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment